ஒரு நாள் திடீரென "ஹேய்.. உனக்கு ஜோசியம் பார்க்க தெரியுமா?" என்றாய். "ஏன்?" என்று கேட்டேன். "உன் கையை காமி" என்றாய். அன்பான மனைவி, இரு குழந்தைகள், வசதியான வாழ்க்கை என்று ஜோசியம் சொல்ல ஆரம்பித்தாய். "நான் பார்க்கட்டுமா?" என்றேன். "உம்ம்" என்றவளாய் உன் கை நீட்டினாய். "ஹையே என்ன கை நீட்டுற.. நாங்க இதழ் ரேகை மட்டும் தான் பார்ப்போம்" என்றேன். உன் வெட்க சிரிப்பில் கூடவா தெரியவில்லை.. என் வாழ்க்கையை சொல்ல வேண்டிய கை எனதல்ல உனது என்று..

நீ தினமும் கோவிலுக்கு வரும் நேரம், நான் காத்திருப்பேன் என தெரியும். அருகில் வந்ததுமே, உன் தோழிகளின் கிண்டல் சிரிப்புகள் என் காதிலும் விழும். "டேய்.. ரொம்ப கிண்டல் செய்றாங்கடா.." என்று தனியாக இருக்கும் பொழுது செல்லமாய் கோபிப்பாய் நீ.

உனக்கு சொல்லியதில்லை. "இருபது வருடங்களாய் தானாக வராதவனை இப்பொழுது தானே வரவழைத்தேன் பார்த்தாயா" என என் மனதில் நக்கல் செய்யும் கடவுள்களை..

"சரி.. அப்படினா நாளைக்கு வரலை" என்பேன் நான். சட்டென்று வரும் பதிலை நிறுத்தி கொண்டு, சரி என்பாய். மறுநாள் நான் மறைந்திருந்து உன் விழித்தேடலை ரசிக்க ஆரம்பிப்பேன். "இந்த முறை நிஜமாவே வரலை போல" என உன் விழியில் ஏமாற்றம் பிறக்கும். அதற்கு மேலும் மறைந்து நிற்க முடியாதவனாய் என்னை காட்டி கொள்வேன்.

பின் சந்திக்கும் பொழுது, உன் உதடுகளில் பொய் கோபத்துடன், "வரமாட்டேன்னு சொல்லிட்டு ஏன் வந்தாய்?" என்பாய். "சரி அப்ப நாளைக்கு நிஜமாவே வரலை" என்றதும் வேகமாக "ச்சும்... பரவாயில்லை வந்துக்கோ" என்பாய். சொல்லாமல் ஜெயித்து விட்டதாய் உன் விழியில் தோன்றும் அந்த மகிழ்ச்சிக்கு ஆயிரம் முறை உன்னிடம் தோற்கவும் தயாராயிருக்கின்றேன் நான் என அறிவாயா?


நீ வரும் வரை
விட்டு விட்டு
எரிந்து இருக்கும்
தெரு விளக்கும்
நீ கடந்து
செல்கையில்
குட்டிச் சூரியனாய்..


நீ போடும் கோலம்
காண உதிக்கும்
அதிகாலை சூரியனும்
பகலெல்லாம்
உன்னை கண்ட
மயக்கத்தில்
மாலை பொழுதும்..


ஒரு முறையேனும்
உன்னை விட
அழகாய் இருப்போமென
மெல்ல மெல்ல வரும்
பௌர்ணமி முழுநிலவும்..
தோல்வி வெட்கத்தில்
தேய்பிறையும்..


உன் இமைச்சாமரம்
வீசும் தென்றலுக்கு தான்
உன் விழிச்சிறையில்
வந்து சிக்கியவன் நான்..


நீ கொடுத்து போகும்
ஆயிரம் கனவுகளும்
பறித்து போகும்
இரவு தூக்கங்களும்..
வரமும் அளித்து
சாபமும் தரும்
வேதங்களில்
இது காதல் தான்..
This entry was posted on 9:12 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

19 பதில்கள்:

On November 19, 2008 at 9:24 PM , புதியவன் said...

உன் இமைச்சாமரம்
வீசும் தென்றலுக்கு தான்
//உன் விழிச்சிறையில்
வந்து சிக்கியவன் நான்..

நீ கொடுத்து போகும்
ஆயிரம் கனவுகளும்
பறித்து போகும்
இரவு தூக்கங்களும்..
வரமும் அளித்து
சாபமும் தரும்
வேதங்களில்
இது காதல் தான்..//

கவிதைகள் ரெம்ப அழகா இருக்கு. கவிதைக்கு முன் சொல்லியிருக்கும் கதை (கவிதை) நல்லா இருக்கு காண்டீபன் வாழ்த்துக்கள்.

 
On November 19, 2008 at 9:37 PM , காண்டீபன் said...

@புதியவன்
//கவிதைகள் ரெம்ப அழகா இருக்கு. கவிதைக்கு முன் சொல்லியிருக்கும் கதை (கவிதை) நல்லா இருக்கு காண்டீபன் வாழ்த்துக்கள்.//

நன்றி தோழா! கவிதை காதல் என்றாலே அழகுதானே :)

 
On November 19, 2008 at 10:54 PM , PoornimaSaran said...

கவிதை சூப்பர்.. கவிதைக்கு முன்னாடி சொல்லி இருக்கும் கவிதையும் சூப்பர்..
இதை நீங்க கதையாக போடிங்கன்னா இன்னமும் நல்லா இருக்கும்..

 
On November 19, 2008 at 11:06 PM , காண்டீபன் said...

@poornimasaran
//கவிதை சூப்பர்.. கவிதைக்கு முன்னாடி சொல்லி இருக்கும் கவிதையும் சூப்பர்..
இதை நீங்க கதையாக போடிங்கன்னா இன்னமும் நல்லா இருக்கும்..//

நன்றிங்க Poornima.

கதையா சொன்னா, கதையின் கரு முக்கியமாக போயிடும். கதாபாத்திரங்கள் முக்கியமாக போயிடும். வசனங்கள் முக்கியமாக போயிடும்.

எனக்கு முழுக்கு முழுக்க காதல் மட்டுமே இருக்கனும் :) அதான் இந்த முறை. முதல் பதிவின் பெயர்க்காரணமும் அதுவே. இது கதையல்ல. காதல்.

 
On November 20, 2008 at 8:36 AM , ஸ்ரீமதி said...

வாவ் காண்டீபன் கலக்கறீங்க.. முழுக்க முழுக்க காதல் மட்டும் தான் இருக்கு உங்க பதிவுல.. ரொம்ப சூப்பர்.. இதுவே கம்மியான பாராட்டாதான் எனக்கு தெரியுது.. அவ்ளோ நல்லா இருக்கு.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஒவ்வொரு வரியும் குறிப்பிட்டு சொல்லனும்ன்னா உங்க முழுபதிவும் தான் பின்னுட்டத்துல போடணும்... அவ்ளோ சூப்பர்.. :)))))))

 
On November 20, 2008 at 9:25 AM , காண்டீபன் said...

@ஸ்ரீமதி //வாவ் காண்டீபன் கலக்கறீங்க.. முழுக்க முழுக்க காதல் மட்டும் தான் இருக்கு உங்க பதிவுல.. ரொம்ப சூப்பர்.. இதுவே கம்மியான பாராட்டாதான் எனக்கு தெரியுது.. அவ்ளோ நல்லா இருக்கு.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ஒவ்வொரு வரியும் குறிப்பிட்டு சொல்லனும்ன்னா உங்க முழுபதிவும் தான் பின்னுட்டத்துல போடணும்... அவ்ளோ சூப்பர்.. :)))))))//

உங்கள் பாராட்டிற்கு நன்றி தோழி.

 
On November 20, 2008 at 12:23 PM , Divyapriya said...

உங்க கவிதைல, சூரியனும், நிலவும், தென்றலும் படும் பாடு ரொம்ப அழகா இருக்கு :)

 
On November 20, 2008 at 2:13 PM , ப்ரதீபா said...

கவிதை/கதை இரண்டுமே அழகாயிருக்கு:-)

 
On November 20, 2008 at 7:08 PM , காண்டீபன் said...

@divyapriya
//உங்க கவிதைல, சூரியனும், நிலவும், தென்றலும் படும் பாடு ரொம்ப அழகா இருக்கு :)//

நீங்க மறுமொழியில் சொன்னதினால அவை அனைத்தும் சந்தோஷபடும் என்பதில் ஐயமில்லை.. நன்றி தோழி.

 
On November 20, 2008 at 7:08 PM , காண்டீபன் said...

@ப்ரதீபா //கவிதை/கதை இரண்டுமே அழகாயிருக்கு:-)//

நன்றி தோழி.

 
On November 21, 2008 at 3:48 AM , தமிழ் தோழி said...

///நீ கொடுத்து போகும்
ஆயிரம் கனவுகளும்
பறித்து போகும்
இரவு தூக்கங்களும்..
வரமும் அளித்து
சாபமும் தரும்
வேதங்களில்
இது காதல் தான்..////

எனக்கு இந்த வரிகள் பிடிச்சிருக்கு
கவிதை,கதை சூப்பர்

 
On November 21, 2008 at 10:30 AM , அதிரை ஜமால் said...

//சொல்லாமல் ஜெயித்து விட்டதாய் உன் விழியில் தோன்றும் அந்த மகிழ்ச்சிக்கு ஆயிரம் முறை உன்னிடம் தோற்கவும் தயாராயிருக்கின்றேன் நான் என அறிவாயா?//

ஆம் தோழா முன்னாளில் காதலியிடமும்,
பின் மனைவியடமும்,
கடைசியில் குழந்தையிடமும் தோற்பது ஒரு சுகம் தான்.

 
On November 21, 2008 at 12:57 PM , காண்டீபன் said...

@அதிரை ஜமால்
//
ஆம் தோழா முன்னாளில் காதலியிடமும்,
பின் மனைவியடமும்,
கடைசியில் குழந்தையிடமும் தோற்பது ஒரு சுகம் தான்.//

அனுபவமோ :) உண்மை தான்!

 
On November 22, 2008 at 5:07 AM , அதிரை ஜமால் said...

\\ காண்டீபன் said...
@அதிரை ஜமால்
//
ஆம் தோழா முன்னாளில் காதலியிடமும்,
பின் மனைவியடமும்,
கடைசியில் குழந்தையிடமும் தோற்பது ஒரு சுகம் தான்.//

அனுபவமோ :) உண்மை தான்!\\

இன்னும் குழந்தையிடம் தோற்க துவங்கவில்லை.

 
On November 22, 2008 at 5:08 AM , கார்த்திக் said...

"உம்ம்" என்றவளாய் உன் கை நீட்டினாய். "ஹையே என்ன கை நீட்டுற.. நாங்க இதழ் ரேகை மட்டும் தான் பார்ப்போம்" என்றேன்.

இதுக்கு பேரு ஜப்பான் ஜோசியம் இல்லையா ?

// உன் இமைச்சாமரம்
வீசும் தென்றலுக்கு தான்
உன் விழிச்சிறையில்
வந்து சிக்கியவன் நான்..//

கவிதை அழகு.
படித்தேன் ரசித்தேன்.

 
On November 22, 2008 at 10:04 AM , காண்டீபன் said...

@அதிரை ஜமால்
//
இன்னும் குழந்தையிடம் தோற்க துவங்கவில்லை.
//

:)) அதுவும் இனிமை தான்.

 
On November 22, 2008 at 10:05 AM , காண்டீபன் said...

@
//
"உம்ம்" என்றவளாய் உன் கை நீட்டினாய். "ஹையே என்ன கை நீட்டுற.. நாங்க இதழ் ரேகை மட்டும் தான் பார்ப்போம்" என்றேன்.

இதுக்கு பேரு ஜப்பான் ஜோசியம் இல்லையா ?
//

ஹாஹா! நன்றி தோழரே.

 
On November 25, 2008 at 8:33 AM , அருள் said...

லேட்டா பின்னூட்டம் எழுதுவதற்கு மண்ணிக்கவும்...

எப்ப எழுதுனாலும் உங்களுடைய வரிகளுக்கு ஒரு சலாம்....

 
On November 26, 2008 at 1:59 AM , அதிரை ஜமால் said...

\\ காண்டீபன் said...
@அதிரை ஜமால்
//
இன்னும் குழந்தையிடம் தோற்க துவங்கவில்லை.
//

:)) அதுவும் இனிமை தான்.\\

ஆம் உண்மையே.

அந்த இனிமையான தருணங்களுக்காக காத்திருக்கிறேன்