காதழியம் -- இது கதையல்ல காதல்
6:19 PM | Author: காண்டீபன்

முதல் முறையாய் உன்னை அன்று தான் பார்த்தேன். "அழகானதொரு தேவதை பாரடா" என்றான் நண்பன். நான் ஆத்திகன் ஆனது அன்று தான்.

வகுப்பறையில் வாத்தியார் உன்னை எழுந்து நின்று பேச சொல்கையில்,எனக்கு கால் வலிக்க தொடங்கியது. பின்னொரு நாளில் இதை சொல்கையில் நீ சிரித்தாய். "பொய் சொல்லாதே" என்றாய். "ஆமாம். எனக்கு வாயும் வலித்தது" உண்மையை ஒப்புக்கொண்டேன் நான்.

முதல் முறையாக நீ என்னிடம் பேசிய நாள் இன்னும் என் குறிப்பேட்டில் வட்டமிட்டபடி இருக்கின்றது. காதல் என்னிடம் பேச தொடங்கிய நாள்.

நான் உன்னை விரும்புகின்றேன் என்று உன்னிடம் சொன்னதும் நீ அழ தொடங்கினாய். நான் உன் கண்ணீர்துளிகள் தரையை தொடாதபடி தாங்க தொடங்கினேன்.உன் வலிகளை வாங்கிக்கொண்டு என் சிரிப்புகளை பகிர்ந்து கொள்வது காதல் தானடி.

"ஒரு முத்தம் கொடேன்" என்றேன் நான். "ச்சீ போ..மாட்டேன்" செல்லமாய் நீ.
"சரி இரண்டாய் கொடேன்.." நான் கெஞ்ச, என் புகை படத்திற்கு முத்தம் கொடுத்து விட்டு சென்றாய். பொறாமையும் கோபமும் ஒரு புகைபடம் மேலே கூட வரும் என அன்று தான் உணர்ந்தேன்.

நான் சொல்லும் யாவற்றையும் உம் கொட்டி கேட்கின்றாய். என்றாவது தெரியுமா உனக்கு? இது கதையல்ல காதல் என்று..



பொம்மை கேட்டு
அழும் குழந்தை
போல
உன்னை கேட்டு
அடம் பிடிக்குது
என் மனம்

அழும் குழந்தையை
கிள்ளுவதாக
உன் கூந்தலை
கலைந்து செல்கின்றது
காற்று..


வடம் பிடித்து
தேரிழுத்து
வணங்க சொல்வது
கடவுள்..
உன் கை பிடித்து
உடனிழுத்து
நெருங்க சொல்வது
காதல்..


என் காதலை விட
அழகானவள் நீ..
என் கவிதைகளில் எல்லாம்
கருத்தானவள் நீ..


உன் வெட்கங்களை எல்லாம்
அனைக்க பார்க்கிறது
என் தேடல்..
என் தேடல்களை எல்லாம்
தடுக்க பார்க்கிறது
உன் வெட்கம்..


வரிகள் எழுதி
கவிஞனாகும் ஆசையில்லை..
விழிகள் படித்து
கவிஞனாகும் வரம்
மட்டும் வேண்டும்..

This entry was posted on 6:19 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

36 பதில்கள்:

On November 15, 2008 at 9:25 PM , ஆயில்யன் said...

//நான் உன் கண்ணீர்துளிகள் தரையை தொடாதபடி தாங்க தொடங்கினேன்.உன் வலிகளை வாங்கிக்கொண்டு என் சிரிப்புகளை பகிர்ந்து கொள்வது காதல் தானடி//

:)))

 
On November 15, 2008 at 9:25 PM , ஆயில்யன் said...

//பொறாமையும் கோபமும் ஒரு புகைபடம் மேலே கூட வரும் என அன்று தான் உணர்ந்தேன்//

அட! ஆமாங்க! நல்லாவே ஃபீல் பண்ணியிருக்கீங்க!

 
On November 15, 2008 at 9:26 PM , ஆயில்யன் said...

/./வரிகள் எழுதி
கவிஞனாகும் ஆசையில்லை..
விழிகள் படித்து
கவிஞனாகும் வரம்
மட்டும் வேண்டும்.. //

வாவ்! அருமை!

 
On November 15, 2008 at 9:35 PM , காண்டீபன் said...

@ஆயில்யன்
//:)))//
வருகைக்கு நன்றி!

//அட! ஆமாங்க! நல்லாவே ஃபீல் பண்ணியிருக்கீங்க!//
உணர்ச்சிகள் தானுங்க எல்லாத்துக்கும் கருவறை!

//வாவ்! அருமை!//
நன்றி! முதல் முறையா வந்ததுக்கும், முதல் முதலாய் வந்ததற்கும், பாராட்டியதற்க்கும்..

 
On November 15, 2008 at 9:59 PM , Anonymous said...

//உன் வெட்கங்களை எல்லாம்
அனைக்க பார்க்கிறது
என் தேடல்..
என் தேடல்களை எல்லாம்
தடுக்க பார்க்கிறது
உன் வெட்கம்..//

எல்லா கவிதைகளும் அருமை...அற்புதமாயிருக்கு காண்டீபன்!!!

 
On November 15, 2008 at 10:21 PM , காண்டீபன் said...

@புனிதா
//எல்லா கவிதைகளும் அருமை...அற்புதமாயிருக்கு காண்டீபன்!!!//

நன்றி தோழி.

 
On November 17, 2008 at 2:51 AM , அருள் said...

/./வரிகள் எழுதி
கவிஞனாகும் ஆசையில்லை..
விழிகள் படித்து
கவிஞனாகும் வரம்
மட்டும் வேண்டும்.. //


" அருமையான வரிகள் "

நன்று காண்டீபன்!!!

 
On November 17, 2008 at 6:22 AM , Unknown said...

ரொம்ப ரொம்ப அழகான கவிதைகள், உங்க தளமும் ரொம்ப அழகா இருக்கு..:))

 
On November 17, 2008 at 8:47 AM , Divyapriya said...

ஒவ்வொரு வரியும் அழகோ அழகு...கவிதைகளை திரும்ப திரும்ப படிச்சேன்...இந்த வரிகள் ரொம்ப பிடிச்சது...
//அழும் குழந்தையை
கிள்ளுவதாக
உன் கூந்தலை
கலைந்து செல்கின்றது
காற்று..//

தொடர்ந்து நிறைய எழுதிங்க...ஆவலோடு படிக்க காத்திருக்கிறேன்...

 
On November 17, 2008 at 8:59 AM , காண்டீபன் said...

@அருள்
//" அருமையான வரிகள் "

நன்று காண்டீபன்!!!//

நன்றி தங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும், பாராட்டுக்கும்.

 
On November 17, 2008 at 9:00 AM , காண்டீபன் said...

@ஸ்ரீமதி
//ரொம்ப ரொம்ப அழகான கவிதைகள், உங்க தளமும் ரொம்ப அழகா இருக்கு..:))//

நன்றி தோழி. கவிதைகளை ரசித்தற்கும் தங்கள் வருகைக்கும்.

 
On November 17, 2008 at 9:02 AM , காண்டீபன் said...

@திவ்யப்ரியா
//ஒவ்வொரு வரியும் அழகோ அழகு...கவிதைகளை திரும்ப திரும்ப படிச்சேன்...இந்த வரிகள் ரொம்ப பிடிச்சது...//

நன்றிங்க!

//தொடர்ந்து நிறைய எழுதிங்க...ஆவலோடு படிக்க காத்திருக்கிறேன்...//

நீங்க சொல்லிடீங்கல, கண்டிப்பா தொடர்ந்து நிறைய எழுதிங்கறேன் :)

 
On November 18, 2008 at 9:22 AM , நாகை சிவா said...

தெய்வமே!

எப்படிங்க இப்படி எல்லாம்...

அநியாயத்துக்கு பீல் பண்ணி இருக்கீங்க...

அதிலும் கடைசி பத்தி பின்னிட்டீங்க...

நமக்கு அவ்வளவா ஒத்து வராத தளம் தான் இருந்தாலும் நல்லாவே இருக்கு உங்கள் கதையல்ல காதல்

 
On November 18, 2008 at 9:25 AM , நட்புடன் ஜமால் said...

//பொறாமையும் கோபமும் ஒரு புகைபடம் மேலே கூட வரும் என அன்று தான் உணர்ந்தேன்.//

ரொம்ப நல்லா இருக்கு.

 
On November 18, 2008 at 9:55 AM , ப்ரதீபா said...

கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அருமை:-)

 
On November 18, 2008 at 10:47 AM , காண்டீபன் said...

@நாகை சிவா
//அநியாயத்துக்கு பீல் பண்ணி இருக்கீங்க...

அதிலும் கடைசி பத்தி பின்னிட்டீங்க...

நமக்கு அவ்வளவா ஒத்து வராத தளம் தான் இருந்தாலும் நல்லாவே இருக்கு உங்கள் கதையல்ல காதல்//

காதல் மேல் அப்படி என்னங்க தோழரே கோபம்! வருகைக்கு நன்றி! மீண்டும் வருக.

 
On November 18, 2008 at 10:48 AM , காண்டீபன் said...

@அதிரை ஜமால்
//ரொம்ப நல்லா இருக்கு.//

நன்றி தோழா.

 
On November 18, 2008 at 10:48 AM , காண்டீபன் said...

@ப்ரதீபா
//கவிதை வரிகள் ஒவ்வொன்றும் அருமை:-)//

தங்கள் வருகைக்கும் பாராட்டிற்க்கும் நன்றி தோழி.

 
On November 18, 2008 at 11:24 AM , Poornima Saravana kumar said...

கவிதை அருமை.. வாழ்த்துக்கள்..

 
On November 18, 2008 at 2:11 PM , ஜியா said...

sema kalakkal kaandipan... unga blog iththana naala miss pannittene.. first oru round vituttu varren.. :))

 
On November 18, 2008 at 2:17 PM , ஜியா said...

//காதழியம்// - ழி??

 
On November 18, 2008 at 2:32 PM , ஜியா said...

oru post thaan ithu varaikkum pottirukeengala... seekiram aduthaduththu postunga...

 
On November 18, 2008 at 9:16 PM , காண்டீபன் said...

@என் பதிவுகள்/En Pathivugal
//கவிதை அருமை.. வாழ்த்துக்கள்..//
பாராட்டிற்க்கும் வருகைக்கும் நன்றி தோழி.

 
On November 18, 2008 at 9:17 PM , காண்டீபன் said...

@ஜி
////காதழியம்// - ழி??//
தெரிந்து வைத்தது தான் தோழா.
விளக்கம் விரைவில்.

//oru post thaan ithu varaikkum pottirukeengala... seekiram aduthaduththu postunga...//
இப்பொழுது தான் பதிவெழுத ஆரம்பித்தேன், கண்டிப்பாக மேலும் எழுதுவேன். நன்றி தோழரே.

 
On November 19, 2008 at 1:46 AM , புதியவன் said...

//
என் புகை படத்திற்கு முத்தம் கொடுத்து விட்டு சென்றாய். பொறாமையும் கோபமும் ஒரு புகைபடம் மேலே கூட வரும் என அன்று தான் உணர்ந்தேன்.//

//உன் வெட்கங்களை எல்லாம்
அனைக்க பார்க்கிறது
என் தேடல்..
என் தேடல்களை எல்லாம்
தடுக்க பார்க்கிறது
உன் வெட்கம்..//

கவிதைகள் அருமை காண்டீபன்

 
On November 19, 2008 at 6:21 AM , நாகை சிவா said...

காதல் மேல எனக்கு கோவம் என்று எப்பங்க சொன்னேன்...

எனக்கு ஒத்து வராத தளம் என்று தான் சொன்னேன்... இது வரைக்கும் ஒத்து வரல என்பதால் அது ஒத்து வராத தளமாக இருக்கலாம்.... ;)

 
On November 19, 2008 at 9:09 AM , காண்டீபன் said...

@புதியவன்
//கவிதைகள் அருமை காண்டீபன்//

நன்றி தோழா.

 
On November 19, 2008 at 9:10 AM , காண்டீபன் said...

@நாகை சிவா //காதல் மேல எனக்கு கோவம் என்று எப்பங்க சொன்னேன்...

எனக்கு ஒத்து வராத தளம் என்று தான் சொன்னேன்... இது வரைக்கும் ஒத்து வரல என்பதால் அது ஒத்து வராத தளமாக இருக்கலாம்.... ;)//

கடவுளை கூட தான் இது வரைக்கும் பார்த்திருக்க மாட்டீங்க. வரும் நேரத்தில் எல்லாம் அழகாக வரும் தோழா!

 
On November 19, 2008 at 10:01 AM , Poornima Saravana kumar said...

//பொறாமையும் கோபமும் ஒரு புகைபடம் மேலே கூட வரும் என அன்று தான் உணர்ந்தேன்.//

நீங்க பெரிய கவிஞன் தான்..

 
On November 19, 2008 at 11:36 AM , காண்டீபன் said...

@PoornimaSaran said...
//நீங்க பெரிய கவிஞன் தான்..
///

நான் பெரிய கவிஞன் இல்லைங்க! நான் கவிஞனா இல்லையானே எனக்கு சந்தேகம் உண்டு.
உங்கள் பாராட்டுக்கு (உள்குத்து இல்லைனு நம்பி) நன்றிகள்.

 
On November 19, 2008 at 8:36 PM , நாணல் said...

ஒவ்வொரு வரியும் அழகா இருக்குங்க... :)

வகுப்பறையில் வாத்தியார் உன்னை எழுந்து நின்று பேச சொல்கையில்,எனக்கு கால் வலிக்க தொடங்கியது. பின்னொரு நாளில் இதை சொல்கையில் நீ சிரித்தாய். "பொய் சொல்லாதே" என்றாய். "ஆமாம். எனக்கு வாயும் வலித்தது" உண்மையை ஒப்புக்கொண்டேன் நான்.

இது ரொம்ப பிடிச்சிருக்கு... :))

வரிகள் எழுதி
கவிஞனாகும் ஆசையில்லை..
விழிகள் படித்து
கவிஞனாகும் வரம்
மட்டும் வேண்டும்..


நிறைய எழுத வாழ்த்துக்கள் கவிஞரே... :)

 
On November 19, 2008 at 10:31 PM , Poornima Saravana kumar said...

காண்டீபன் நீங்க தாராளமா நம்பலாம் உள்குத்து எல்லாம் இல்லை..

 
On November 19, 2008 at 10:33 PM , Poornima Saravana kumar said...
This comment has been removed by the author.
 
On November 21, 2008 at 9:10 PM , 'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

இதழ்பிரியா அழகிய புன்னகையாய் காதல் உங்கள் பதிவேட்டில் நிரம்பிவழிகிறது, திகட்டாத தேனாய் :)

 
On November 22, 2008 at 8:29 AM , தேவன் மாயம் said...

நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
Thevanmayam.blogspot.com.

 
On November 22, 2008 at 10:44 AM , தேவன் மாயம் said...

நான் வலைக்கு புதியவன்
என் வலைக்கு அனைவரையும்
வரவேற்கிறேன்.
உங்கள் கருத்துக்களையும்
தெரிவிக்கவும்!
தேவா.
Thevanmayam.blogspot.com.