காதழியம் - கருவிழிச்சிறை
7:37 PM | Author: காண்டீபன்

"உனக்கு பிடித்த திருக்குறள் எதுடா?" என்கிறாய், அதிகாலை டி.வி குறள் கேட்டு விட்டு. "நான் இன்னும் அதை படிக்கவில்லை" என்றேன். "அப்படியா? அப்புறம் அது பிடிக்கும்னு எப்படி தெரியும்?" என்று பதில் கேள்வி தொடுக்கிறாய். "தெரியவில்லை. எப்பொழுது படிக்க அனுமதிப்பாய்... உன் இரு வரி உதடுகளை?".

"நமக்கு ரசனை வேறுமாதிரிடா" என்றாய் ஒரு நாள். "அப்படியா? உனக்கு என்ன பிடிக்கும்?" என்றேன். "எனக்கு உன்னை பிடிக்கும்" என்றாய் கொஞ்சலாய். "எனக்கும் உன்னை பிடிக்கும்... பார் ஒரே மாதிரி தான் இருக்குது நமது ரசனை" என்றதும் வந்த உன் செல்ல கோபமும் எனக்கு பிடிக்குமடி.

"சரி சரி.. உனக்கு நீளமான கதைகள் பிடிக்கும். எனக்கு ஒரு பக்கம் தாண்டினால் கண்ணை கட்டும். உனக்கு ஆங்கில ம்யூசிக் ஆல்பங்கள் பிடிக்கும். எனக்கும் தமிழை தாண்டாது ரசனை.
உனக்கு கறுப்பு பிடிக்கும். எனக்கு சிகப்பு பிடிக்கும்.. அப்படித்தானே" என்றதும் உம் கொட்டினாய்.. "அதே மாதிரி.. உனக்கு என்னை பிடிக்கும். எனக்கு என்னை விட உன்னை தான் பிடிக்கும்.. ஆக நம் ரசனை ஒரே மாதிரி இல்லாமல் இருப்பது நல்லது தானே?" என்றதும் ஒரு சில வினாடி புரியாமல் விழித்தாயே.. அந்த விழிகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

"உன் கைவிரல்களை முதன்முதலில் என்னோடு கோர்த்துகொண்டது நியாபகம் இருக்கா?" என்று கேட்டதும், "ஏன்?" என்கிறாய். "ஹ்ம்ம்.. காதல் என் மேல் ஏறி சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்ட நாளடி அது.." என்றதும், "ஹையே..." என பழிச்சு காட்டும் உன் குழந்தைதனம் எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?

"உன் கருவிழிச்சிறையில் இருப்பவனுக்கு இதழ்ச்சாவி எப்பொழுது?" கேட்டால் படும் வெட்கத்தை மொழி பெயர்த்து கொஞ்சம் சொல்லேன்..



எப்பொழுதும்
அணிந்து கொள்கிறாயே..
எப்பொழுது
அவிழ்க்க போகிறாய்..
உன் வெட்கங்களை?


காதல் அஹிம்சை
எவன் சொன்னான்?
உன் விழிச்சிறையில்
அடிபட்டு கிடக்கும்
என் இதயத்தை
கேட்டுப்பார்..

எனக்காக கொஞ்சம்
மாற்றிக்கொள்...
உன் விழிகளை
சைவத்திற்கும்..
உன் இதழ்களை
அசைவத்திற்கும்..

எத்தனை நேரம்
பேசிக்கொண்டாலும்
பிரியும் நேரம்
உன் விழிகள்
பேசும் மௌனத்தில்
படர்ந்து இருக்கும்
நம் காதல்.
This entry was posted on 7:37 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

23 பதில்கள்:

On January 1, 2009 at 10:26 PM , புதியவன் said...

கவிதைகள் அழகு...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கண்டீபன்...

 
On January 1, 2009 at 10:32 PM , காண்டீபன் said...

@புதியவன்
//கவிதைகள் அழகு...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கண்டீபன்...//
நன்றி தோழா.
தங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 
On January 1, 2009 at 11:24 PM , நட்புடன் ஜமால் said...

\\"உன் கைவிரல்களை முதன்முதலில் என்னோடு கோர்த்துகொண்டது நியாபகம் இருக்கா?" என்று கேட்டதும், "ஏன்?" என்கிறாய். "ஹ்ம்ம்.. காதல் என் மேல் ஏறி சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்ட நாளடி அது.." \\

நான் சொல்ல வேண்டியது பல என்றாலும் ...

மொளனமாய் ...

 
On January 1, 2009 at 11:28 PM , Unknown said...

வெகு அழகு அனைத்துமே :))

//"சரி சரி.. உனக்கு நீளமான கதைகள் பிடிக்கும். எனக்கு ஒரு பக்கம் தாண்டினால் கண்ணை கட்டும். உனக்கு ஆங்கில ம்யூசிக் ஆல்பங்கள் பிடிக்கும். எனக்கும் தமிழை தாண்டாது ரசனை.
உனக்கு கறுப்பு பிடிக்கும். எனக்கு சிகப்பு பிடிக்கும்.. அப்படித்தானே" என்றதும் உம் கொட்டினாய்.. "அதே மாதிரி.. உனக்கு என்னை பிடிக்கும். எனக்கு என்னை விட உன்னை தான் பிடிக்கும்.. ஆக நம் ரசனை ஒரே மாதிரி இல்லாமல் இருப்பது நல்லது தானே?" என்றதும் ஒரு சில வினாடி புரியாமல் விழித்தாயே.. அந்த விழிகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.//

மிக ரசித்தேன் இவ்வரிகளை :))

//எனக்காக கொஞ்சம்
மாற்றிக்கொள்...
உன் விழிகளை
சைவத்திற்கும்..
உன் இதழ்களை
அசைவத்திற்கும்..//

கவிதை வரிகள் அனைத்தும் அழகு.. எனினும் எனை மிகக்கவர்ந்தது இந்த வரிகள்.. :))

 
On January 1, 2009 at 11:28 PM , நட்புடன் ஜமால் said...

\\எப்பொழுதும்
அணிந்து கொள்கிறாயே..
எப்பொழுது
அவிழ்க்க போகிறாய்..
உன் வெட்கங்களை?\\

அவிழ அவிழ

நெறுக்கம்

மனதாலும் ...

 
On January 1, 2009 at 11:28 PM , நட்புடன் ஜமால் said...

\\காதல் அஹிம்சை
எவன் சொன்னான்?
உன் விழிச்சிறையில்
அடிபட்டு கிடக்கும்
என் இதயத்தை
கேட்டுப்பார்..\\

காதல் அ-ல்லது ஹிம்சை

 
On January 1, 2009 at 11:29 PM , நட்புடன் ஜமால் said...

\\எனக்காக கொஞ்சம்
மாற்றிக்கொள்...
உன் விழிகளை
சைவத்திற்கும்..
உன் இதழ்களை
அசைவத்திற்கும்..\\

அருமை

 
On January 1, 2009 at 11:30 PM , நட்புடன் ஜமால் said...

\\எத்தனை நேரம்
பேசிக்கொண்டாலும்
பிரியும் நேரம்
உன் விழிகள்
பேசும் மௌனத்தில்
படர்ந்து இருக்கும்
நம் காதல்.\\

புரியாத பிரியம்
பிரியும்போது புரியும்

 
On January 1, 2009 at 11:31 PM , நட்புடன் ஜமால் said...

கரு விழிச்சிறையில் இருக்கும்

காதல் அனைத்தும் அருமை தோழா

 
On January 1, 2009 at 11:45 PM , ஆயில்யன் said...

//நமக்கு ரசனை வேறுமாதிரிடா" என்றாய் ஒரு நாள். "அப்படியா? உனக்கு என்ன பிடிக்கும்?" என்றேன். "எனக்கு உன்னை பிடிக்கும்" என்றாய் கொஞ்சலாய். "எனக்கும் உன்னை பிடிக்கும்... பார் ஒரே மாதிரி தான் இருக்குது நமது ரசனை" என்றதும் வந்த உன் செல்ல கோபமும் எனக்கு பிடிக்குமடி//


ரசித்தேன் !


அருமை !!!

 
On January 1, 2009 at 11:46 PM , ஆயில்யன் said...

ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

அஞ்சலி!!!!


அஞ்சலி

எந்திரு

அஞ்சலி

எந்திரு அஞ்சலி......!

 
On January 2, 2009 at 2:45 AM , butterfly Surya said...

எல்லாமே நல்லாயிருக்கு.. படமும் கவிதையும்.

வாழ்த்துக்கள்

 
On January 2, 2009 at 3:10 AM , KARTHIK said...

// எத்தனை நேரம்
பேசிக்கொண்டாலும்
பிரியும் நேரம்
உன் விழிகள்
பேசும் மௌனத்தில்
படர்ந்து இருக்கும்
நம் காதல்.//

கவிதை அழகு

புத்தாண்டு வாழ்துக்கள்

 
On January 2, 2009 at 9:20 AM , காண்டீபன் said...

@அதிரை ஜமால்
// சொல்ல வேண்டியது பல என்றாலும் ...

மொளனமாய் ...//

:) நான் மட்டும் என்ன சொல்ல இதற்கு தோழரே..

//காதல் அ-ல்லது ஹிம்சை//

அழகாக சொன்னீர்.

//கரு விழிச்சிறையில் இருக்கும்

காதல் அனைத்தும் அருமை தோழா//
மிக்க நன்றி தோழா.

புத்தாண்டு வாழ்த்தும்..

 
On January 2, 2009 at 9:21 AM , காண்டீபன் said...

@ஸ்ரீமதி
//கவிதை வரிகள் அனைத்தும் அழகு.. //

நன்றி தோழி.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
On January 2, 2009 at 9:22 AM , காண்டீபன் said...

@ஆயில்யன்
//ரசித்தேன் !
அருமை !!!//

நன்றிகள் பல.

//ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
அஞ்சலி!!!!//

:)

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
On January 2, 2009 at 9:23 AM , காண்டீபன் said...

@வண்ணத்துபூச்சியார்
//
எல்லாமே நல்லாயிருக்கு.. படமும் கவிதையும்.

வாழ்த்துக்கள்//
நன்றி.. வருகைக்கும்.. பாராட்டிற்கும்..

 
On January 2, 2009 at 9:23 AM , காண்டீபன் said...

@கார்த்திக்
//கவிதை அழகு
புத்தாண்டு வாழ்துக்கள்//

நன்றி தோழா. புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும்.

 
On January 3, 2009 at 11:52 PM , Divyapriya said...

//வெட்கத்தை மொழி பெயர்த்து//

இது ரொம்ப புதுசா இருக்கே :)
வழக்கம் போல மிக மிக அற்புதம்…தொடருங்க

 
On January 4, 2009 at 9:23 PM , G3 said...

:))))))) - இந்த புன்னகை உங்க பதிவ படிச்சதும் வந்தது :)

உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

பதிவுல கமெண்ட்டாம போற மனசெல்லாம் என்னைக்குமே வரபுடாது :P

 
On January 6, 2009 at 7:56 AM , தியாகு said...

"எப்பொழுதும்
அணிந்து கொள்கிறாயே..
எப்பொழுது
அவிழ்க்க போகிறாய்..
உன் வெட்கங்களை?
" kavithai nalla irruku boss

 
On January 12, 2009 at 2:11 AM , Poornima Saravana kumar said...

கவிதைகள் செம அழகு:)

 
On January 12, 2009 at 10:12 AM , இராம்/Raam said...

காதழியம்??

appidinna enna?